நாடொன்றில் 15,500 ஊழியர்களுக்கு McDonald's இலவச உணவு!
சிங்கப்பூரில் 15,500 உணவு விநியோக ஊழியர்களுக்கு இலவசமாக McDonald'sஇன் உணவு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு முதல் முறையாக அந்நிறுவனம் உணவு விநியோக ஊழியர்களுக்கான நாளை அனுசரித்தது.
அதனை முன்னிட்டுத் தீவெங்கிலும் உள்ள McDonald'sஇன் 140 உணவகங்களில் நேற்று அவர்களுக்கு உணவு கொடுக்கப்பட்டது.
நேற்று மாலை 2 மணி முதல் 5 மணி வரை McDonald's உணவகங்களுக்கு உணவு விநியோகச் சீருடையுடன் செல்லும் ஊழியர்களுக்கு 2 துண்டு Chicken McCrispy®, Banana Pie, ஒரு போத்தல் தண்ணீர் ஆகியவை வழங்கப்பட்டன.
அதேவேளை கொரோனா தொற்று காரணமாக கடந்த ஈராண்டு காலம் உணவு விநியோக ஊழியர்களுக்கு மிகவும் கடினமான ஒன்றாக அமைந்தது.
இந்நிலையில் அவர்களது ஒத்துழைப்புக்கும் கடின உழைப்புக்கும் நன்றிதெரிவிக்க அத்தகைய ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக நிறுவனம் குறிப்பிட்டது.