அமெரிக்காவில் லொட்டரி சீட்டில் நபர் ஒருவருக்கு அடித்த மிகபெரும அதிர்ஷ்டம்!
லொத்தர் சீட்டிலுப்பில் நபர் ஒருவருக்கு மாபெரும் அதிர்ஷ்டம் கிட்டியுள்ளது.
ஜாக்பொட் சீட்டிலுப்பில் குறித்த நபர் இவ்வாறு பரிசு வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் இல்லியோன்ஸில் இந்த அதிர்ஷ்ட லொத்தர் சீட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இதுவரையில் வென்றெடுக்கப்பட்ட மூன்றாவது மிகப் பெரிய ஜாக்பொட் பரிசுத் தொகை இதுவென்பது குறிப்பிடத்கத்கது.
டஸ் பெலன்ஸ்கீயின் எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் இந்த டிக்கட் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
இந்த பரிசுத் தொகையை வென்றவர் யார் என்பது பற்றிய விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
இந்த லொத்தர் சீட்டினை கொள்வனவு செய்த அனைவரும் தங்களது வெற்றி இலக்கத்தை பரிட்சீத்து பார்க்குமாறு கோரப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஜாக்பொட் சிட்டிலுப்பின் வெற்றி இலக்கங்கள் பின்வாறுமாறு, 13, 36, 45, 57, 67 என்பதுடன் மெகா போல் இலக்கம் 14 என்பது குறிப்பிடத்தக்கது.