விமான விபத்தில் அமெரிக்க செனட் சபை உறுப்பினர் குடும்பத்துடன் உயிரிழப்பு!
அமெரிக்காவில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் அமெரிக்க செனட் சபை உறுப்பினர் குடும்பத்துடன் உயிரிழந்துள்ளார்.
அமெரிக்கா - டகோட்டா மாகாணத்தின் செனட் சபை உறுப்பினர் டக் லார்சன். இவர் உட்டா மாகாணம் கேன்யன்லாண்ட்ஸ் விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானத்தில் புறப்பட்டுள்ளார்.
குறித்த விமானத்தில் அவரது மனைவி ஏமி மற்றும் இரண்உ மகன்களும் சென்றுள்ளனர்.
அமெரிக்க பெடரஷன் நிறுவனத்துக்கு சொந்தமான பி.ஏ-28 என்ற அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்துக்கான காரணம் தொடர்பில் தேசிய விமான போக்குவரத்து வாரியம் விசாரணை நடத்தி வருகிறது.