கனடாவிலிருந்து போதைப் பொருள் கடத்திய 8 பேருக்கு 95 ஆண்டுகள் சிறைத் தண்டனை
கனடா மற்றும் ஆஸ்திரேலியாவை இணைக்கும் போதைப் பொருள் கடத்தல் திட்டத்தில் ஈடுபட்ட 8 பேருக்கு மொத்தமாக 95 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு, கனோலா எண்ணெய் பாட்டில்களில் மறைத்த பல டன் திரவ மெத்தாம்ஃபெட்டமின் கடத்தலுக்கு தொடர்பு பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதிகாரிகள், 2022 டிசம்பர் முதல் 2023 ஜூன் வரை கனடா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையில் நான்கு கடத்தல் முயற்சிகளை தடுப்பதாக தெரிவித்தனர்.

இந்த முயற்சிகளில், 2.5 டன் மேற்பட்ட மெத்தா, 17 லிட்டர் கனோலா எண்ணெய் பாட்டில்களில் வெளிநாட்டுக்கு கடத்திச் செல்ல முயன்ற போது பிடிக்கப்பட்டது.
கைதுசெய்யப்பட்ட 8 பேரில் ஏழு ஆஸ்திரேலியர்கள் மற்றும் ஒருவர் அமெரிக்கர்; அனைவரும் குற்றவாளிகளாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளனர்.
கடைசி ஒருவர் புதன்கிழமை நியூ சவுத் வேல்ஸ் நீதிமன்றத்தில் தண்டனை பெற்றார்.
அவர்களின் பெயர்கள் இரு நாடுகளிலும் அதிகாரிகள் வெளியிடவில்லை.