ஆர்ஜென்டீனா அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக மெஸ்ஸி அறிவிப்பு
உலக கால்பந்தாட்ட நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸி ஆர்ஜென்டீனா கால்பந்து அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
சுமார் 20 ஆண்டுகளாக ஆர்ஜென்டீனா அணிக்காக விளையாடிய மெஸ்ஸி, அந்த அணியின் மிக முக்கியமான வீரராக திகழ்ந்துள்ளார்.

அவரது தலைமையில் 2022ஆம் ஆண்டு உலகக் கோப்பையை ஆர்ஜென்டீனா வென்றது. மேலும், ஆர்ஜென்டீனா அணிக்காக 6 உலகக் கோப்பை தொடர்களில் விளையாடியுள்ள மெஸ்ஸி, சர்வதேச கால்பந்து அரங்கில் பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார்.
தனது ஓய்வு அறிவிப்பில், கடந்த 20 ஆண்டுகளாக ஆர்ஜென்டீனா மக்களிடம் இருந்து கிடைத்த அன்புக்கு நன்றி தெரிவித்துள்ள மெஸ்ஸி, இனி இரசிகராக இருந்து அணிக்கு ஆதரவளிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.
சர்வதேச போட்டிகளிலுருந்து ஓய்வு பெற்றாலும், கிளப் மட்டத்திலான போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் என தெரிவிக்கப்படுகின்றது. தற்போது அவர் இன்டர் மியாமி அணிக்காக விளையாடி வருகிறார்.
அதேவேளை இதற்கு முன்னர் பார்சிலோனா மற்றும் பாரிஸ் செயின்ட் - ஜெர்மைன் அணிகளுக்காகவும் மெஸ்ஸி விளையாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.