மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவத் தளங்களுக்கு இடமில்லை; ஈரான்!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவத் தளங்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனைத் ஈரான் இராணுவப் பேச்சாளர் மொஹமட் அக்ரமினியா தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் படையினரை நிலைநிறுத்தும் இடங்கள் என 228-க்கும் மேற்பட்ட பகுதிகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாக அல்லது முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், இப்பிராந்தியத்தில் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்கும் திறன் கொண்ட அமெரிக்க இராணுவத் தளம் எதுவும் தற்போது எஞ்சியிருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இராணுவத்தினர் தமது கப்பல்களுக்கான எரிபொருள் மற்றும் படையினருக்கான உணவுப் பொருட்களைக்கூட மத்திய கிழக்கிற்கு வெளியேயுள்ள இடங்களிலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஈரான் இராணுவப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.