ஐரோப்பா சென்ற படகு கடலில் மூழ்கியதில் குழந்தைகள் உட்பட சுமார் 40 பேர் உயிரிழப்பு
ஐரோப்பாவிற்கு குடியேற்றவாசிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கடலில் மூழ்கியதில், சிறு குழந்தைகள் உட்பட சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் அறிவித்துள்ளன.
இந்தத் துயரச் சம்பவம் துனிசியாவை (Tunisia) அண்டிய மத்தியதரைக்கடல் பகுதியில் நேற்று (22) நிகழ்ந்துள்ளது. விபத்துக்குள்ளான படகில் 70-க்கும் மேற்பட்டோர் பயணித்ததாகத் தெரியவந்துள்ளது.
துனிசிய அதிகாரிகள் விரைந்து செயற்பட்டதன் காரணமாக 20 பேர் வரை உயிருடன் மீட்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
ஐரோப்பாவை நோக்கிப் பயணிக்கும் குடியேற்றவாசிகள் எதிர்கொள்ளும் ஆபத்தை இந்த விபத்து மீண்டும் ஒருமுறை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.