செல்ஃபி கேட்ட ரசிகரை சரமாரியாக குத்திய மைக் டைசன்...வைரலாகும் காணொளி
பிரபல முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் பயணியை தாக்கி மீண்டும் சர்ச்சையில் சிக்கினார்.
முன்னாள் குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவார். தாக்குதல், பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் விற்பனை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
மைக் டைசன் பல பொது நிகழ்ச்சிகளில் கொடூரமாக நடந்து கொண்டதால் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்த நேரத்தில், அவர் சான் பிரான்சிஸ்கோவிலிருந்து விமானத்தில் மைக் டைசனைப் ரசிகர் ஒருவர் பார்த்தார், மேலும் ரசிகர் அவரிடம் தொடர்ந்து பேசி செல்ஃபி எடுக்க வேண்டுகோள் விடுத்தார், இதனால் கோபமடைந்த மைக் டைசன் பின் இருக்கையில் அமர்ந்திருந்தபயணியை முகத்தில் குத்தினார்.
இதனால், பயணியின் முகத்தில் ரத்தக் காயம் ஏற்பட்டது. பீதியில் அமர்ந்திருந்த பயணியின் காணொளி வைரலாக பரவியது.
Don’t poke the bear. Especially when the bear is Mike Tyson.
— Barstool Sports (@barstoolsports) April 21, 2022
pic.twitter.com/Pura0c2qJJ