நைஜரில் வெடித்த இராணுவ கிளர்ச்சி: பிரான்ஸ் மக்களை அதிரடியாக வெளியேற்றும் அரசு!
நைஜரில் இராணுவ கிளர்ச்சி வெடித்துள்ள நிலையில், அந்நாட்டில் வசித்து வந்த சொந்த நாட்டவர்களையும், ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களையும் பிரான்ஸ் அரசாங்கம் பாதுகாப்பாக வெளியேற்றி வருகிறது.
முதற்கட்டமாக நைஜரிலிருந்து இன்றைய தினம் (02-08-2023) 262 பிரான்ஸ் குடிமக்களை ஏற்றிக் கொண்டு, அந்நாட்டின் தலைநகரமான நியாமியில் இருந்து முதல் விமானம் புறப்பட்டு சென்றது.
இந்நிலையில் பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளின் குடிமக்களைக் கொண்ட குறித்த விமானம், இன்றைய தினம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தரையிறங்கியுள்ளது.
நைஜரின் வான்வெளி மூடப்பட்டதுள்ளதால், அந்நாட்டில் தமது மக்கள் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்கு, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுவதாக பிரான்ஸ் அரசாங்கம் கூறியுள்ளது.
மேலும், எஞ்சியிருக்கும் பிரான்ஸ் பிரஜைகளை வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும், நியாமியில் உள்ள விமான நிலையத்திற்குச் செல்லும்படியும் பிரான்ஸ் அரசாங்கம் தமது மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.