கனேடியருக்கு லொட்டரியில் பரிசாகக் கிடைத்த பெரும் தொகை: என்ன திட்டம் வைத்திருக்கிறார் தெரியுமா?
கனடாவில் வாழும் ஒருவருக்கு லொட்டரியில் ஒரு மில்லியன் டொலர்கள் பரிசாக கிடைத்துள்ளது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Sechelt என்ற இடத்தில் வாழும் Matthew Cookney, அந்த பரிசுத்தொகை தன் வாழ்வையே மாற்ற இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஒரு குடும்பமாக வாழ்வை நடத்த பட்ட கஷ்டத்தை இந்த பரிசு இலகுவாக்க இருப்பதாக தெரிவித்துள்ள Matthew, குடும்பத்துடன் சுற்றுலா செல்வது எப்போதுமே தன் கனவாக இருந்தது என்கிறார்.
லொட்டரியில் பரிசு கிடைத்தால் குடும்பமாக சுற்றுலா செலவேண்டும் என்ற கனவை இந்த லொட்டரியில் கிடைத்த பரிசு நனவாக்கியுள்ளதாக தெரிவிக்கும் Matthew, தான் தனக்கு பரிசு கிடைத்த செய்தியை தன் பெற்றோருடன் பகிர்ந்துகொள்வதற்கு தான் ஆர்வமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆனாலும், கிடைத்த பணம் முழுவதைம் கேளிக்கைக்காக செலவு செய்வது அவரது திட்டமில்லை. கொஞ்சம் கடன் இருக்கிறதாம் Matthewவுக்கு. அந்தக் கடனைத் தீர்ப்பதுடன், கொஞ்சம் முதலீடும் செய்ய விரும்புகிறார் அவர்.