வெளிநாட்டில் விஷம் வைத்து கொள்ளையடிக்கப்பட்ட அமெரிக்க கோடீஸ்வரர்
ஸ்பெயின் நாட்டில் அமெரிக்க கொடீஸ்வரர் ஒருவர் விஷம் வைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அவரது நண்பரின் உதவியால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
குறித்த சம்பவத்தில் தொடர்புடைய இருவரை மாட்ரிட் பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க கோடீஸ்வரரான 43 வயது Jose Rosado என்பவர் மாட்ரிட் நகரில் அமைந்துள்ள ஹொட்டல் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டார்.
விசாரணையில் அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளது தெரியவந்தது. ஸ்பெயின் நாட்டில் சுற்றுலாவுக்கு சென்ற Jose Rosado கிளப் ஒன்றிற்கு செல்லும் வழியில் இருவரை சந்தித்துள்ளார்.
அந்த இருவருடன் ஹொட்டலுக்கு திரும்பிய Jose Rosado, அவர்களுடன் மது அருந்தியதுடன், உறவிலும் ஈடுபட்டுள்ளார். ஆனால் அந்த இருவரும் Jose Rosado-கு மதுவில் அதிக போதை மருந்து கலந்து அளித்துள்ளனர். இதுவே அவரது மரணத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.
இதனிடையே, Jose Rosado-வின் நண்பர் அவரை தொடர்பு கொள்ள முடியாமல், பொலிசாரின் உதவியை நாடியுள்ளார். முதற்கட்ட விசாரணையில் Jose Rosado மரணம் இயற்கையாக நேர்ந்தது என்றே பொலிசார் கருதியுள்ளனர்.
ஆனால், Jose Rosado-வின் வங்கி அட்டையை அவரது மரணத்திற்கு பிறகும் பயன்படுத்தப்பட்டது பொலிசாரின் கவனத்திற்கு வரவே, துரிதமாக செயல்பட்ட அதிகாரிகள் மொராக்கோ மற்றும் ரோமானியர் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர்.
இருவரிடம் இருந்தும் 2500 யூரோ தொகை மற்றும் வங்கி அட்டையின் மூலம் வாங்கிய நகைகள், மொபைல்போன் உட்பட விலையுயர்ந்த பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.
கைதான இருவரும் ஏற்கனவே இதே குற்றச்சாட்டில் பலமுறை சிக்கியவர்கள் எனவும், ஆனால் கொலை சம்பவத்தில் கைதாவது இதுவே முதன்முறை எனவும் பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.