ஓய்வெடுக்க லட்சக்கணக்கில் சம்பளமா?
கடும் வெயிலில் பகல் பாராமல் வேலை செய்த பின் தான் ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவுக்காக சம்பாதிக்க முடியும் என்ற சூழலில் தான் பலர் வாழ்கின்றனர்.
இருப்பினும் ஓய்வு எடுப்பதற்கு கூலி கொடுப்பது போன்ற சில வேலைகள் உள்ளன.அல்லது ஜாலியாக உணவருந்த வேண்டியது அதற்கு பதிலாக நல்ல சம்பளம் வழங்கப்படுகிறது.
கட்டிப்பிடி வேலை
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மிஸ்ஸி ராபின்சன், மனநல ஆர்வலர் மற்றும் தொழில் ரீதியாக உரிமம் பெற்ற கடில் தெரபிஸ்ட் (cuddle therapist), மக்களைக் கட்டிப்பிடிப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கிறார்.
மிஸ்ஸி ராபின்சன் தனது வாடிக்கையாளரை ஒரு இரவு கட்டிப்பிடிப்பதற்காக ரூ 1.5 லட்சத்திற்கும் மேல் வசூலிக்கிறார்.
எதுவும் செய்யாமல் சுற்றி திரிய சம்பளம்
ஜப்பான் நபர் எதுவும் செய்யாமல் பணம் சம்பாதிக்கிறார். உண்மையில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள அந்த நபர் குறிப்பிட்ட அவர்களுடன் நேரத்தை செலவிடுகிறார், சுற்றித் திரிகிறார், உணவு சாப்பிடுகிறார் மற்றும் அவர்கள் சொல்வதைக் கேட்கிறார்.
வெறுமனே இந்த வேலைக்காக அவர் சம்பந்தப்பட்டவரிடம் இருந்து நிறைய பணம் வாங்கிக் கொள்கிறார்.
தூங்குவதற்கும் டிவி பார்ப்பதற்கும் கூட சம்பளம்
உலகில் உள்ள ஒரு தனித்துவமான நிறுவனம் தூங்குவதற்கு மட்டுமே ஆட்களை வேலைக்கு அமர்த்துகிறது.
ஆடம்பர படுக்கை நிறுவனமான க்ராஃப்டெட் பெட்ஸ், அதன் தளவாடங்களை பரிசோதிப்பதற்காக ஆட்களை வேலைக்கு அமர்த்துகிறது.
இதனுடன் அவர்கள் தூங்குவதற்கும் டிவி பார்ப்பதற்கும் நிறுவனம் ஏற்பாடு செய்கிறது அந்த நபர்களுக்கு நிறுவனம் பெரும் தொகையை வழங்குகிறது.