துப்பாக்கிகளை வகைப்படுத்தும் நடவடிக்கை மீளாய்வு செய்யப்படும் – கெரி ஆனந்த சங்கரி
கனடாவில் துப்பாக்கிகளை வகைபப்டுத்தும் நடவடிக்கை மீளாய்வு செய்யப்படும் என பொதுப்பாதுகாப்பு அமைசச்ர் கெரி ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.
நாட்டின் துப்பாக்கி வகைப்படுத்தல் முறையை மீளாய்வு செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் அறிவித்துள்ளார்.
இந்த பரிசீலனையில் எஸ்.கே.எஸ் SKS எனப்படும் அரை தானியங்கி துப்பாக்கியைப் பற்றிய ஆதிவாசி சமூகங்களுடனான ஆலோசனையும் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச்சூடு சம்பவங்கள்
SKS துப்பாக்கிகளை ஆதிவாசிகள் உணவுத் தேவைக்கான வேட்டையாடல்களுகக்காக பரவலாகப் பயன்படுகின்றனர்.
அதேசமயம், கடந்த சில ஆண்டுகளில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் சாதாரண குடிமக்கள் உயிரிழந்த முக்கிய துப்பாக்கிச்சூடு சம்பவங்களிலும் இந்த ஆயுதம் பயன்படுத்தப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
1989 ஆம் ஆண்டு மானிட்ரியலில் நடந்த எகோல் பொலிடெக்னிக் படுகொலைக்குப் பிறகு உருவான பொலிசிசோவியன்ட் எனும் துப்பாக்கி கட்டுப்பாட்டு அமைப்பு, SKS துப்பாக்கியைத் தடை செய்ய வேண்டும் என்றும், ஆனால் உணவிற்கான வேட்டைக்காக பயன்படுத்தும் ஆதிவாசிகளுக்கு விதிவிலக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளது.
துப்பாக்கிகள், குண்டுகள், பத்திரங்கள் உள்ளிட்டவற்றின் சட்டக்கட்டமைப்பை எளிமைபப்டுத்தும் தொடர் செயன்முறையை உறுதிப்படுத்தும் வகையில் விரிவாக மதிப்பீடு செய்வதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.