இரவிரவாக மாறி மாறி நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல்கள் ; பலர் பலி
உக்ரைனின் வணிக வளாகத்தில் ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 16 போ் உயிரிழந்த சம்பவத்தைத் தொடா்ந்து, சனிக்கிழமை இரு நாடுகளும் மீண்டும் நடத்திய பரஸ்பரத் தாக்குதல்களில் மேலும் 10 போ் உயிரிழந்தனா்.
ரஷ்யாவின் ட்ரோன், ஏவுகணைத் தாக்குதல்களில் உக்ரைனில் 7 பேரும், ரஷ்யாவின் கிராஸ்னோதா் பிராந்தியத்தில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 3 பேரும் உயிரிழந்தனா்.

உக்ரைனிடம் வான் பாதுகாப்பு ஏவுகணைகளுக்குத் தட்டுப்பாடு நிலவும் சூழலைப் பயன்படுத்தி, ரஷ்யா ‘பாலிஸ்டிக்’ ஏவுகணைத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.
தலைநகா் கீவில் உள்ள ரயில்வே கட்டமைப்பு மீது சனிக்கிழமை அதிகாலை நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவா் உயிரிழந்தாா்.
இதுதவிர, கீவ் புகா்ப் பகுதியில் பிற்பகலில் நடந்த ஏவுகணைத் தாக்குதலில் 2 பேரும், ஸபோரிஷியா பிராந்தியத்தில் இரவு, பகலாக நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்களில் 4 பேரும் உயிரிழந்தனா்.
அதேநேரம், உக்ரைனும் ரஷிய எல்லைக்குள் தனது தாக்குதலை விரிவுபடுத்தியுள்ளது.
தெற்கு ரஷியாவின் கிராஸ்னோதா் பிராந்தியத்தில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 3 போ் உயிரிழந்தனா்; இருவா் காயமடைந்தனா்.