காணாமல்போன பெலாரஸ் சமூக ஆர்வலர் உக்ரைனில் பிணமாக தொங்கியதால் பரபரப்பு
பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த சமூக ஆர்வலர் விட்டாலி ஷிஷாவ் (Vitaly Shishaw) உக்ரைனில் உள்ள க்யிவ் நகரில் நேற்று காணாமல் போனதாகக் கூறப்பட்ட நிலையில் அவர் வீட்டருகே உள்ள பூங்கா ஒன்றில் இன்று பிணமாக தொங்கியமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு பெலாரஸ் நாட்டில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று அதிபராக பொறுப்பேற்றுள்ள அலெக்சாண்டர் லுகாஷென்கோ (Alexander Lukashenko) தேர்தல் நேரத்தில் தனக்கு எதிராகச் செயல்பட்டவர்களை அச்சுறுத்தும் வகையில் எதிச்சதிகார ஆட்சி நடத்தி வருகிறார் என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இந்த நிலையில் பெலாரஸ் அதிபரின் அச்சுறுத்தலுக்கு அஞ்சி அண்டை நாடுகளான, போலந்து, லிதுவேனியா, உக்ரைன் நாடுகளில் பெலாரஸை சேர்ந்த பலர் தஞ்சமடைந்துள்ளனர்.
ஏற்கனவே கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பெலாரஸ் பத்திரிகையாளர் ஒருவர் சென்ற விமானத்தை நடுவானில் வழிமறித்து மின்ஸ்க் நகரில் தரையிறக்கியதும், தற்போது டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கெடுத்த தடகள வீராங்கனை போலந்தில் தஞ்சம் அடைந்திருப்பதும் பரப்ரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் தற்போது மரணமடைந்த விட்டாலி ஷிஷாவ் உக்ரைன் நாட்டில் உள்ள பெலாரஸ் மக்களின் நல்வாழ்விற்காக சமூக சேவை அமைப்பு ஒன்றை நிறுவி செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், நேற்று காலை வீட்டை விட்டு வெளியில் சென்ற விட்டாலி ஷிஷாவ் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை என புகைரளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று அவரது வீட்டருகே உள்ள பூங்கா ஒன்றில் அவர் பிணமாக தொங்கிக்கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து உக்ரைன் பொலிஸார் இதனை கொலை என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி சுந்தரேஸ்வரி இரத்தினகோபால்
கொக்குவில், கொழும்பு, Duisburg, Germany, Leverkusen, Germany
13 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அருணாசலம் முத்துலிங்கம்
காரைநகர் மாப்பாணவூரி, இராசாவின் தோட்டம், Aubervilliers, France
20 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சின்னத்தம்பி அழகு
வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Montreal, Canada, Cornwall, Canada, நல்லூர்
31 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்லம்மா இராசையா
புங்குடுதீவு 10ம் வட்டாரம், பிரான்ஸ், France, டோட்மண்ட், Germany
20 May, 2019
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022