கனடாவில் மாயமான தம்பதி தொடர்பில் பொலிசார் வெளியிட்ட தகவல்
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் வாகன விபத்தில் சிக்கி தம்பதி ஒன்று மரணமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தம்பதி வெள்ளிக்கிழமையில் இருந்தே மாயமானதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை பகல் அவர்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் வெளியிட்ட தகவலில், Glen Hamakawa(67) மற்றும் Eva Hamakawa(56) ஆகிய இருவருமே, தங்களது ATV வாகனம் விபத்துக்குள்ளானதில் சிக்கி பரிதாபமாக மரணமடைந்தவர்கள் என குறிப்பிட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் இது ஒரு விபத்து என்றே பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த தம்பதியின் ATV வாகனம் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் எனவும், அது பள்ளத்தில் சரிந்ததில் விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.
வெள்ளிக்கிழமையில் இருந்தே, பொலிசாரும் மீட்புக்குழுவினரும் குறித்த தம்பதியை தீவிரமாக தேடி வந்துள்ளனர். தற்போது அவர்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம், வருத்தமளிப்பதாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.