கல்கரியில் நண்பர்களுடன் சென்ற இளைஞருக்கு நேர்ந்த துயரம்
Harvie Passage பகுதியில் மாயமான இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கல்கரி பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
20 வயது கடந்த Tyrese Lens என்பவர் ஜூன் 27 முதல் மாயமானதாக பொலிசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, தீவிரமாக தேடி வந்த பொலிசார், ஜூலை 7ம் திகதி அவரது சடலத்தை மீட்டுள்ளனர்.
எங்கிருந்து அவர் சடலம் மீட்கப்பட்டது அல்லது எவ்வாறு அவர் இறந்தார் என்பது உள்ளிட்ட தகவல்களை பொலிசார் வெளியிட மறுத்துள்ளனர்.
ஆனால் Tyrese Lens மரணத்தில் மர்மம் இருப்பதாக தெரியவில்லை என மட்டுமே கல்கரி பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கடைசியாக Harvie Passage பகுதியில் நண்பர்களுடன் காணப்பட்டவர், பின்னர் இன்னொரு பகுதிக்கு வேறு சில நண்பர்களுடன் நடக்க சென்றதாக கூறப்படுகிறது.
அதன் பிறகு அவர் திரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. அவர் நண்பர்களுடன் நடக்க செல்லும் போது தமது உடைமைகளை விட்டுச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.