தந்தை கண்முன்னே கடலில் மூழ்கி உயிரிழந்த இலங்கை இளைஞர்! நெஞ்சை உருக்கும் சோக சம்பவம்

By Balamanuvelan Apr 26, 2021 01:01 PM GMT
Report

கனடாவில், மகன் தேர்வுகளை முடித்த மகிழ்ச்சியைக் கொண்டாட, கடற்கரைக்கு சென்ற ஒரு குடும்பம், கண் முன்னே மகனை பறிகொடுத்துவிட்டு, அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நிற்கிறது.

இலங்கையிலிருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்தவர்கள், Don Jayasinghe, அவரது மனைவி Chandima மற்றும் அவர்களது ஒரே மகன் Supul Jayasinghe (21). கடந்த வியாழனன்று, தனது இறுதித்தேர்வை முடித்த மகிழ்ச்சியைக் கொண்டாட Flatrock என்ற பகுதியிலுள்ள கடற்கரைக்கு சென்றுள்ளது Jayasinghe குடும்பம். அப்போது தங்கள் நாயுடன் உயரமான பாறை ஒன்றில் ஏறியிருக்கிறார் Supul.

தந்தை அவரிடம், மகனே அங்கே போகாதே என்று கூறியும், தன் நாய் ஓடிய பாதையில் அதைப் பிடிக்க ஓடியிருக்கிறார் அவர். அப்போது திடீரென கால் சறுக்கி கடலில் விழுந்திருக்கிறார் Supul. தன்ணீரில் விழுந்த Supul, பாறைகளைப் பிடித்துக்கொண்டு ஏற முயன்றபோதுதான் அவருக்கு தெரிந்திருக்கிறது, அந்தப் பாறைகள் எல்லாம் வழுக்குப் பாறைகள்.


திரும்பத் திரும்ப ஏற முயன்றும் முடியாமல், கடைசியாக விடயம் விபரீதமானதை உணர்ந்து, தன் தந்தையிடம் அப்பா என்னைக் காப்பாற்றுங்கள் என்று மகன் கதற, சட்டென, தன் கையிலிருந்த நாய் பெல்ட்டை வீசி, மகனிடம் அதை பிடித்துக்கொள்ளச் சொல்லியிருக்கிறார் Jayasinghe.

ஆனால் Supulஆலும் அதைப் பிடிக்க முடியவில்லை, சொல்லப்போனால், தந்தை Jayasingheவும் வழுக்கி கடலில் விழும் அபாயம் ஏற்பட, தட்டுத்தடுமாறி தந்தை தன்நிலைக்கு வரும்போது, இருள் சூழ்ந்துகொண்டிருக்கிறது. அவ்வளவுதான், ஒரு பத்து நிமிடங்களுக்குப் பின் Supulஐக் காணவில்லை.

தண்ணீரில் மூழ்கிவிட்டார் அவர். தந்தை திகைத்துப் போய் நிற்க, தாய் கதற, தகவலறிந்து ஹெலிகொப்டர் உதவியுடன் Supulஐத் தேடும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள் பொலிசார். ஆனால், அவரது உடல் கிடைக்கவேயில்லை.

தந்தை கண்முன்னே கடலில் மூழ்கி உயிரிழந்த இலங்கை இளைஞர்! நெஞ்சை உருக்கும் சோக சம்பவம் | Missing Person Ocean Search Flatrock

ஊடகவியலாளர் ஒருவர் தயங்கியவண்ணம், என்ன நடந்தது என்று கூற முடியுமா என்று கேட்க, நடந்ததை மிகத் தெளிவாக விவரிக்கிறார் Supulஇன் தந்தை Jayasinghe. உங்கள் ஒரே மகனை இழந்த நிலையில், உங்களால் எப்படி இப்படி தைரியமாக நின்று நடந்ததைக் கூறமுடிகிறது என்று கேட்கிறார் அந்த ஊடகவியலாளர். அதற்கு, நான் புத்த மதத்தைச் சேர்ந்தவன், என்ன நடந்ததோ அது ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் நடந்துள்ளது.

ஆகவேதான் என்னால் உங்களிடம் தைரியமாக நின்று பேச முடிகிறது என்று கூறும் Jayasinghe, இளைஞர்களுக்கு ஒரு அறிவுரையும் கூறுகிறார். பெற்றோர் சொல்வதற்கு செவிகொடுங்கள், என் மகன் என் சொல்லைக் கேட்டு அந்த பாறையின் விளிம்புக்கு போகாமல் இருந்திருந்தால், அவன் இப்போது உயிருடன் இருந்திருப்பான் என்கிறார் அவர்.

ஒருவேளை உங்கள் மகனுடைய உடல் கிடைத்தால் எப்படி உணருவீர்கள் என அவரிடம் கேட்க, அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை, அவன் திரும்பி வரப்போவதில்லை, அவன் போய்விட்டான் என்கிறார் Jayasinghe. அடுத்து என்ன செய்யப்போகிறீர்கள் என்றால், அந்தக் கேள்விக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறார் அவர்.  

தந்தை கண்முன்னே கடலில் மூழ்கி உயிரிழந்த இலங்கை இளைஞர்! நெஞ்சை உருக்கும் சோக சம்பவம் | Missing Person Ocean Search Flatrock

தந்தை கண்முன்னே கடலில் மூழ்கி உயிரிழந்த இலங்கை இளைஞர்! நெஞ்சை உருக்கும் சோக சம்பவம் | Missing Person Ocean Search Flatrock

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US