மகளுடன் மாயமான கனேடியர்... வாகனம் ஒன்றை தேடும் பொலிசார்
கனடாவின் வான்கூவர் தீவில் மகளுடன் மாயமான தந்தை தொடர்பில் பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
வான்கூவர் தீவில் ஜனவரி 23ம் திகதி Jesse Bennett என்பவர் தமது அமகளை அவரது தாயாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நிலையில், மகளுடன் மாயமானார். இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் Jesse Bennett அளித்த ஒப்புதலை அவர் மீறியுள்ளதாக கூறும் பொலிசார், சிறுமியையும் Jesse Bennett-யும் தீவிரமாக தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், இதுவரை இந்த விவகாரத்தில் எந்த துப்பும் துலங்காத நிலையில், சிறுமிக்கு ஆபத்து நேர்ந்திருக்கலாம் என்பதை பொலிசார் மறுத்துள்ளனர். தமது மகளை தம்முடன் வைத்துக்கொள்வதற்காகவே, Jesse Bennett பொலிசாரை விட்டுவிலகிச் செல்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பில் பொதுமக்கள் விசாரணை அதிகாரிகளுக்கு உதவ முன்வர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும், சம்பவத்தின்போது Jesse Bennett பயன்படுத்தியதாக கூறும் சாம்பல் நிற 2005 Honda Civic கார் தொடர்பில் தகவல் தெரியவரும் மக்கள் உதவ வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மட்டுமின்றி, பொலிசாருக்கு இந்த வழக்கு தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து உதவிகள் கிடைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.