தீ விபத்தில் இருந்து தப்பிக்க மாடியில் இருந்து குதித்த பெண் காயம்
கனடாவில் தீ விபத்திலிருந்து தப்பிப்பதற்காக மாடியில் இருந்து கீழே குதித்த பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
மிஸிஸாக பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. வீட்டின் இரண்டாம் மாடியில் ஜன்னல் வழியாக குறித்த பெண் குதித்துள்ளார்.
தீ விபத்தில் சிக்கியிருந்த பெண் உயிரை காப்பாற்றிக் கொள்ளும் நோக்கில் இவ்வாறு குதித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
வீட்டின் கீழ் பகுதியிலிருந்து தீ பரவியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் குறித்த பெண்ணுக்கு உயிர் ஆபத்து கிடையாது எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த தீபத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
பீல் பிராந்திய போலீசார் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.