இரண்டு வெவ்வேறு நிறுவன தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டதால் வேலையிழந்துள்ள கனேடியர்கள்
ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியால் இரத்தக்கட்டிகள் உருவாகும் பிரச்சினை குறித்து தெரியவந்ததுமே, முதல் டோஸாக ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி பெற்றுக்கொண்ட பலர், இரண்டாவது டோஸாக பைசர் அல்லது மொடெர்னா போன்ற வேறொரு நிறுவனத்தின் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டார்கள். சிலர் வெவ்வேறு நிறுவன தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வது நல்லது என்று எண்ணி அப்படி செய்தார்கள்.
ஆனால், அதனால் தங்கள் வேலை போகும் என்பதை அவர்கள் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.
குறிப்பாக, அமெரிக்கா செல்லும் கப்பல்களில் பணியாற்றுவோர், அதுவும் நடனம் போன்ற பொழுதுபோக்குத் துறையைச் சார்ந்த கலைஞர்கள் சிக்கலுக்குள்ளாகியிருகிறார்கள்.
அதாவது, இரண்டு வெவ்வேறு நிறுவன கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்வதை அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை, அமெரிக்க நோய் தடுப்பு மையங்கள் அப்படிப்பட்டவர்களை முழுமையாக தடுப்பூசி பெறாதவர்களாகவே பார்க்கிறது.
அப்படி பாதிக்கப்பட்டவர்களில் ரொரன்றோவைச் சேர்ந்த Rosie Harbansம் ஒருவர். அவர் கப்பல்களில் நடனமாடுவதை பணியாக செய்கிறார்.
அவரைப் போலவே, Nova Scotiaவிலுள்ள Windsorஐச் சேர்ந்த Michael Harrisonம் comedy ventriloquist ஆக பணியாற்றி வருபவர்.
இருவருமே வெவ்வேறு நிறுவன தடுப்பூசிகளை கலந்து போட்டுள்ளதால் இருவருக்கும் இப்போது வருவாய் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.
ஆக, வேறு வழியில்லாமல் மூன்றாவதாக ஒரு டோஸ் தடுப்பூசி பெற்றுக்கொள்ளலாமா என ஆலோசித்து வருகிறார்கள் இருவரும்!