தந்தையின் இறுதிசடங்கிலும் பங்கேற்கமாட்டார் மொஜ்தபா கமேனி ; வெளியான தகவல்
கொல்லப்பட்ட ஈரானிய தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கில், அவரது மகனும் தற்போதைய தலைமை மதகுருவுமான மோஜ்தபா கமேனி பங்கேற்கமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து நடத்திய கூட்டுத் தாக்குதலில், ஈரானிய தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.

இதையடுத்து, இருதரப்புக்கும் இடையே வெடித்த போரானது தற்போது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதையடுத்து, கொல்லப்பட்ட தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனிக்கான இறுதிச்சடங்கு நிகழ்வுகள் வரும் சனிக்கிழமை (ஜூலை 4) தொடங்குகின்றன.
மேலும், வரும் ஜூலை 9 அன்று அவரது உடல் ஈரானின் மஷாத் நகரத்தில் அடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது, கமேனியின் இறுதிச்சடங்கில் அவரது மகனும் தற்போதைய ஈரானின் தலைமை மதகுருவுமான அயதுல்லா மோஜ்தபா கமேனி பாதுகாப்பு காரணங்களால் பங்கேற்கமாட்டார் எனத் தெரிவித்துள்ளார்.