கனடாவில் பண மோசடி ; இரு தமிழர்கள் கைது
கனடாவின் டர்ஹாம் பிராந்தியத்தில் முதியவர்களைக் குறிவைத்து இடம்பெற்ற மோசடி தொடர்பில் இரு தமிழர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குற்ற விசாரணை
கடந்த மாதம் 04 ஆம் திகதி டர்ஹாம் பிராந்தியத்தில் முதியவர்களை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட மோசடி தொடர்பான குற்ற விசாரணையை முடித்து, யார்க் பிராந்திய காவல்துறையின் உதவியுடன் நிதிக் குற்றப்பிரிவினரால் ஒரு ஆணும், பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.
குறித்த சந்தேக நபர்கள், வங்கி மற்றும் கிரெடிட் கார்டு நிறுவனங்கள் போல நடித்து தொலைபேசி அழைப்புகளைப் ஏற்படுத்தி உரியவர்களது கணக்குகள் மோசடி செய்யப்பட்டதாக நம்ப வைக்கப்பட்டு பாதிக்கப்பட்டவரின் வங்கி அட்டைகள் மற்றும் கடவுச்சொற்களை மீட்டெடுப்பதற்காக இவர்களால் ஒரு கூரியர் (courier) அனுப்பப்பட்டு பெறப்பட்டுள்ளது.
பின்னர் அவை மோசடியான கொள்முதல் செய்ய பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இது போன்ற சம்பவங்கள் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் D/Cst ஐ தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.