உயிருக்கு போராடிய குரங்கு.. உயிர் பிழைக்கவைத்த நெகிழ்ச்சி தருணம்! வைரலாகும் காட்சிகள்
நாய்கள் கடித்ததில் காயமடைந்து உயிருக்கு போராடிய குரங்கிற்கு முதலுதவி செய்து காப்பாற்றிய ஓட்டுநருக்கு பாரட்டுக்கள் குவிந்து வருகின்றன.
பெரம்பலூர் மாவட்டம், ஒதியம் கிராமத்தில் கடந்த 9ம் தேதி ஓட்டுநர் பிரபு என்பவர் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது குரங்கு ஒன்றை, தெரு நாய்கள் சில விரட்டி கடித்துள்ளன. படுகாயமடைந்த குரங்கு தன்னை காப்பாற்றிக்கொள்ள மரத்தின் மீது ஏறி மயங்கியுள்ளது.
இதனைப் பார்த்த பிரபு சற்றும் தாமதிக்காமல், குரங்கை தன் நண்பரின் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பாதி வழயில் குரங்கு தலை துவண்டு விழுந்துள்ளது. மேலும் மூச்சு விடுவதையும் நிறுத்தியுள்ளது. குரங்கின் ஆபத்தன நிலையை உணர்ந்த பிரபு, உடனடியாக வாகனத்தை நிறுத்தி முதலுதவி அளித்துள்ளார்.
குரங்கின் நெஞ்சு பகுதியை கையால் அழுத்தி, காப்பாற்ற முயன்றிருக்கிறார். இருப்பினும் குரங்கு கண் விழிக்கவில்லை.
எவ்வித அசைவும் ஏற்படாததால், குரங்கு என்றும் பாராமல் அதன் வாயோடு, தன் வாயை வைத்து ஊதினார். அவர் தொடர்ந்து ஊதிய நிலையில், குரங்கு கண் விழித்து பார்த்தது.
இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
A 38-year-old man from #Perambalur tried to resuscitate a wounded monkey by breathing into its mouth. @NewIndianXpress @xpresstn #humanitywithheart pic.twitter.com/iRMTNkl8Pn
— Thiruselvam (@Thiruselvamts) December 12, 2021