கனடாவில் குரங்கம்மை தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
கனடாவில் குரங்கம்மை தொற்றாளர்கள் எண்ணிக்கை 26 என அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தரப்பு உறுதி செய்துள்ளது.
கியூபெக் பகுதியில் மட்டும் 25 பேர்களுக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒன்ராறியோவில் ஒருவருக்கு புதிதாக குரங்கம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரொறன்ரோ பொது சுகாதாரத்துறை வியாழனன்று தெரிவிக்கையில், ரொறன்ரோவில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்துள்ளதாகவும், மேலும் பல சந்தேகத்திற்கிடமான மற்றும் சாத்தியமான பாதிப்புகளை விசாரித்து வருவதாகவும் கூறிப்பிட்டுள்ளது.
மேலும், இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றே சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. பொதுவாக 6ல் இருந்து 13 நாட்களில் அறிகுறிகள் தென்படும் எனவும், ஒருசிலருக்கு 21 நாட்கள் வரையில் தாமதமாகலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், உடல்ரீதியான தொடர்பால் குரங்கம்மை பரவுவதாக கூறுவது உண்மையில் முறையான தகவல் அல்ல எனவும் கனேடிய சுகாதாரத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.