நூறாண்டுகளுக்கு முந்தைய மீன் உயிருடன் சிக்கியது
பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஃப்ரேசர் நதியில் நூறாண்டுகளுக்கு முந்தைய மீன் ஒன்றை உயிருடன் பிடித்துள்ளனர்.
அரிதிலும் அரிதான இச்சம்பவம் Agassiz பகுதிக்கு அருகாமைய்யில் நடந்துள்ளது. அது வெள்ளை ஸ்டர்ஜன் மீன் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 3.5 மீற்றர் நீளம் கொண்ட அந்த மீனானது 363 கிலோ எடை என தெரிய வந்துள்ளது.
ஃப்ரேசர் நதியில் பல அரியவகை மீன்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், தற்போது சிக்கியுள்ள வெள்ளை ஸ்டர்ஜன் இதுவரை சிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
அதனால், இதன் உருவத்தை வைத்து நூறாண்டுகளுக்கு முந்தைய மீனாக இருக்கலாம் என அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், மீனை உரிய முறைப்படி கரைக்கு கொண்டு வந்து, அடையாளப்படுத்தப்பட்டு, ஸ்கேன் செய்த பின்னர் மீண்டும் விடுவித்துள்ளனர்.
வெள்ளை ஸ்டர்ஜன் கனடாவின் மிகப்பெரிய நன்னீர் மீன் என கூறப்படுகிறது. மட்டுமின்றி, அவை மில்லியன் கணக்கான ஆண்டுகளாக எந்த மாற்றமும் இன்றி காணப்படுகிறது என நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது.