ரஷ்யாவிற்கு ஆயுத பாகங்களை கடத்திய கனடியருக்கு தண்டனை
அமெரிக்காவில் இருந்து ரஷ்யாவிற்கு ஆயுதங்களின் பாகங்களை கடத்திய கனடிய பிரஜை ஒருவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் மொன்றியால் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க மத்திய நீதிமன்றம் குறித்த நபருக்கு 40 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
38 வயதான நிகலோய் கோல்ஸ்டேவ் என்ற நபருக்கு இவ்வாறு நீதிமன்றம் தண்டனை வகித்துள்ளது.
அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து குறித்த நபர் பொருட்களை கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளின் அடிப்படையில் அந்நாட்டுக்கு விற்பனை செய்யப்பட முடியாத பொருட்களை இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலத்திரனியல் சாதனங்களை ரஷ்யாவிற்கு அனுப்வி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்பொழுது ரஷ்யாவிற்கும் உக்கிரேனுக்கும் இடையிலான போரின்போது இந்த சாதனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் குறித்த நபருக்கு நீதிமன்றம் 40 மாதங்கள் சிறை தண்டனை விதித்துள்ளது.