கனடாவில் இந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கும் அபாயம்
கனடாவில் மொன்ரியல் நகரில் இன்று காலை முதல் பேருந்து மற்றும் மெட்ரோ சேவைகள் பாதிக்கப்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து சேவையின் பராமரிப்பு ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை முன்னெடுக்க உள்ளனர். இந்த வேலைநிறுத்தம் இரண்டு வாரங்கள் நீடிக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
வேலைநிறுத்த காலத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் காலை, மாலை நெரிசல் மிக்க நேரங்களிலும் இரவு நேரத்திலும் மட்டுமே சேவைகள் இயங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
2,400 பராமரிப்பு ஊழியர்கள் சம்பள உயர்வை கோரி போராட்டம் முன்னெடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிறுவனம் அதிகமாக சப்-கான்ட்ராக்டர்களை நம்புகிறது என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
நிறுவனம் சம்பள முன்மொழிவு செய்திருந்தாலும், தொழிற்சங்கம் அதனை நிராகரித்தது, முக்கிய பிரச்சினைகளில் மாற்றம் செய்ய நிறுவனம் மறுத்துவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளது.
தொழிற்சங்கத்தின் கோரிக்கை நிறுவனத்தின் செலவுகளை 300 மில்லியன் டொலர்கள் அதிகரிக்கும் என்பதால் நிறைவேற்ற முடியாது என போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த வேலைநிறுத்தம் கடந்த ஜூன் மாதத்தில் நடந்த வேலைநிறுத்தத்திற்கு அடுத்ததாக நடைபெறுகிறது.