கனடாவில் பெண்ணுக்கு வாழ்க்கை முழுவதும் கிடைக்கவிருக்கும் அதிர்ஸ்டம்
கனடாவின் மாண்ட்ரியலில் உள்ள செயின்ட்-லாரன்ட் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருக்கு வாழ்நாள் முழுவதும் பணம் பெற்றுக்கொள்ளக் கூடிய அதிர்ஸ்டம் கிட்டியுள்ளது.
ப்ரெண்டா ஆபின்-வேகா என்ற இளம் பெண்ணுக்கு அதிர்ஸ்டம் கிடைக்கப் பெற்றுள்ளது.
சுமார் 20 வயதுடைய ஆபின்-வேகா தனது வேலை நிலையத்தின் வெளியே உட்கார்ந்தபோது, சீட்டுகளை சுரண்டி பார்த்தபோது மூன்று பிகிபேங்க் சின்னங்கள் தோன்றியதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
“என் கண்களில் நம்பிக்கையே வரவில்லை. அந்த சீட்டைக் குறைந்தது 10 தடவை பார்த்தேன்,” என தெரிவித்தார். இதையடுத்து தனது தந்தையை உடனே அழைத்து மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துவிட்டார்.
அதிர்ச்சியால் அந்த நாள் முழுவதும் வேலைக்கு செல்லாமல் வீட்டில் ஓய்வெடுத்ததாகவும் கூறினார்.
வெற்றியாளருக்கு வாரமொன்றுக்கு ஆயிரம் டொலர்கள் என்ற அடிப்படையில் வாழ்நாள் முழுவதும் அல்லது ஒரே முறையில் 1,000,000 டொலர்கள் என தனது விருப்பின் அடிப்படையில் பணப் பரிசுத் தொகையை பெற்றுக்கொள்ள முடியும் என லோட்டோ-க்யூபெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆபின்-வேகா வாரத்துக்கு 1,000 பெற்றுக்கொள்வதையே தேர்ந்தெடுத்துள்ளார்.
இந்த பரிசுப் பணத்தில் வீடு வாங்கவே விருப்பமுள்ளதாகவும் கூறியுள்ளார்.