கனடிய தயாரிப்பு என்ற போர்வையில் விற்கப்படும் வெளிநாட்டு பொருட்கள்
கனடிய தயாரிப்புகள் என்ற போர்வையில் வெளிநாட்டு உற்பத்திகள் விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த பிரச்சனைக்கு எதிராக மொன்ரியாலில் வசிக்கும் ஒருவரும், முன்னணி மளிகை சங்கிலிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.
புரோவிகோ, மேட்ரோ, சோபீஸ், வால்மார்ட் மற்றும் ஜெயன்ட் டைக்ரே ஆகிய நிறுவனங்கள் வழக்கில் பெயரிடப்பட்டுள்ளன.
நுகர்வோருக்கு இழப்பீடு
“இது பொய் விளம்பரத்தின் அடிப்படை உதாரணம்” என குறித்த நபரின் சார்பில் நீதிமன்றில் முன்னிலையாகும் சட்டத்தரணிகளில் ஒருவரான ஜோயி சூக்ரான் தெரிவிக்கின்றார்.
அவரின் குற்றச்சாட்டு படி, மளிகைக் கடைகள் மேபிள் இலை சின்னம், கனடியக் கொடி மற்றும் “Made in Canada” குறிச்சொற்களைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளார்.
கனடாவில் தயாரிக்கப்பட்டது என்று சொல்லும்போது, நுகர்வோரின் தேசபற்று மற்றும் நெறிமுறை உணர்வுகளை பயன்படுத்திக்கொள்கிறார்கள்,” என சூக்ரான் குற்றம் சாட்டியுள்ளார்.
நுகர்வோருக்கு இழப்பீடு வழங்கவும், நிறுவனங்களுக்கு தண்டனை வழங்கவும் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது வெறும் லேபிள் பிரச்சனை மட்டுமல்ல, வாடிக்கையாளர்கள் மற்றும் மளிகைக் கடைகளுக்கிடையிலான நம்பிக்கையை மேலும் குலைக்கும்” என விநியோக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.