கனடாவின் பல மாகாணங்களில் தேடப்படும் இளைஞர்: இந்திய மாணவர் கொலையிலும் தொடர்பு
கனடாவின் நோவா ஸ்கோடியா பொலிசார் 22 வயது இளைஞர் தொடர்பில் பல மாகாணங்களில் தேடுதல் நடவடிக்கையை முடுக்கிவிட்டுள்ளனர்.
குறித்த இளைஞர் இந்திய மாணவர் கொலை வழக்கிலும் தொடர்புடையவர் என தகவல் வெளியாகியுள்ளது. நோவா ஸ்கோடியாவின் Pictou Landing First Nation பகுதியை சேர்ந்த 22 வயது Marcus Michael Denny என்பவரையே பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
குறித்த நபர் மீது ஆயுதங்களால் தாக்குதல், ஆயுதங்கள் வைத்திருத்தல், வாகனத்தில் அதிக வேகம், கைது நடவடிக்கையில் இருந்து தப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
மேலும், செப்டம்பர் 5ம் திகதி இந்திய மாணவர் Prabhjot Singh Katri கொலை வழக்கிலும் இவருக்கு தொடர்பிருப்பதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
மேலும், டென்னியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், ஆனால் தற்போது உதவிக்காக பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, Prabhjot Singh Katri கொலை வழக்கில் இதுவரை இரு இளைஞர்களை கைது செய்துள்ளதாகவும், இன்னும் சிலர் இந்த வழக்கில் சிக்கலாம் எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.