கனடாவில் இணைய மருத்துவ சேவையை நாடும் மக்கள்
கனடாவில் இணைய மருத்துவ சேவைகளை பெற்றுக் கொள்வதற்கு அதிக அளவான மக்கள் உந்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவர்களுக்கு நாட்டில் நிலவிவரும் பற்றாக்குறை காரணமாக இவ்வாறு இணைய வழியிலான மருத்துவ சேவைகளை மக்கள் பெற்றுக்கொள்ள விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
கனடிய மருத்துவ ஒன்றியம் மற்றும் அபகஸ் டேட்டா என்ற நிறுவனங்கள் கூட்டாக இணைந்து இந்த ஆய்வினை முன்னெடுத்துள்ளது.
இந்த ஆய்வில் பங்கேற்ற பலரும் மருத்துவரை சந்திக்க முடியவில்லை எனவும் இதனால் இணைய வழி மருத்துவ சேவைகளை பெற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
கனடாவில் சுமார் 20 விதமானவர்களுக்கு குடும்ப நல மருத்துவரின் சேவை தொடர்ச்சியாக கிடைக்க பெறுவதில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த காலங்களை போன்று அல்லாது தற்பொழுது மருத்துவர்களின் சேவையைப் பெற்றுக் கொள்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.