வெளிநாடொன்றில் ஒரே நாளில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் மரணம்!
ரஷ்யாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனாவால் (Covid-19) 36, 818 பேர் பாதிக்கப்பட்டதோடு 1,240 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவில் இதுவரை மொத்தமாக 91 இலட்சத்து 45 ஆயிரத்து 912 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 2 இலட்சத்து 57 ஆயிரத்து 837 பேர் மரணமடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 10 இலட்சத்து 41ஆயிரத்து 627 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 2,300 பேர் தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.
ரஷ்யாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 34,161 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 78 இலட்சத்து 46 ஆயிரத்து 448 ஆக உயர்ந்துள்ளது.