ரஷ்ய துருப்புக்களின் உயிரிழப்பு தொடர்பில் உக்ரைன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
உக்ரைனுக்கு எதிரான ஆக்கிரமிப்பு போரில் இதுவரை ஒரு இலட்சத்து 31 ஆயிரத்திற்கும் அதிகமான ரஷ்ய துருப்புக்கள் உயிரிழந்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 24 ம் திகதி போர் ஆரம்பமான தினத்தில் இருந்து இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரத்தில் மாத்திரம் 700க்கும் அதிகமான ரஷ்ய துருப்புக்கள் போரில் கொல்லப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 3 ஆயிரத்து 220 தாங்கிகள், 6 ஆயிரத்து 405 கவச வாகனங்கள் மற்றும் 2 ஆயிரத்து 226 பீரங்கிகளையும் இந்த போரில் ரஷ்யா இழந்துள்ளதாக உக்ரைன் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், இந்த தரவுகளை ரஷ்ய தரப்பினர் மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.