சுவிஸில் ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி!
சுவிஸில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றினால், 1,451 பேர் பாதிக்கப்பட்டதோடு 8 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவிஸில் இதுவரை மொத்தமாக 8 இலட்சத்து 39ஆயிரத்து 218 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 11ஆயிரத்து 87 பேர் மரணமடைந்துள்ளனர். சுவிஸில் தற்போதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 62ஆயிரத்து 199 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 186 பேரின் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,060 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது.
சுவிஸில் இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, 7 இலட்சத்து 59ஆயிரத்து 741பேர் பூரண குணமடைந்துள்ளனர்.