மாஸ்கோ பயங்கரவாத தாக்குதல்; 11 பேர் கைது
மாஸ்கோவில் இசை அரங்கில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதல் தொடர்பில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இசை அரங்கில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் 133 பேர் உயிரிழந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
107 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இசை அரங்கின் கழிவறையில் இருந்து 28 உடல்கள் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய அதிபர் புதின், தாக்குதல் நடத்திய 4 தீவிரவாதிகள் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
தாக்குதலை நடத்திவிட்டு உக்ரைன் வழியாகத் தப்பிச் செல்ல தீவிரவாதிகள் திட்டமிட்டதாகவும் அவர்களுக்கு உதவ உக்ரைனில் ஒரு பாதை திறக்கப்பட்டதாகவும் புதின் குற்றம் சாட்டினார்.