சுவிஸ் செல்லும் விமானத்தில் ஏறிய தாய் - மகளுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி!
செஷல்ஸ் தீவிலிருந்து சுவிட்சர்லாந்து செல்வதற்காக ஹிம்மி ஷேத்தல் என்ற பெண்ணும் அவரது மகளும் விமானத்தில் ஏறி உள்ளனர்.
குறித்த விமானத்தில் அவர்களை தவிர முதல் வகுப்பில் 4 பயணிகள் மட்டுமே இருந்துள்ளனர்.
தாயும் மகளும் பயணித்த எகானமி வகுப்பில் வேறு பயணிகள் யாரும் இல்லை. இதனால் தாயும் மகளும் மட்டுமே விமான ஊழியர்களுடன் ஜாலியாக பாட்டுபாடி, நடனமாடிக்கொண்டு பயணித்துள்ளனர்.
மேலும் அதனை காணொளியாக எடுத்து தங்களது வலைதள பக்கத்தில் பதிவிட்டனர்.
இதேவேளை, பணிப்பெண்கள் விமானத்தில் அனுமதிக்கப்பட்ட பல இடங்களுக்கும் தங்களை அழைத்து சென்றதாக ஹிம்மி ஷேத்தல் கூறி உள்ளார்.
இந்த பயணம் தங்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்ததாக குறிப்பிட்டிருந்தார்.
அவரது காணொளி வைரலான நிலையில் பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.