19 வயதான மோட்டோஜிபி ரைடர் ஜேசன் டுபாஸ்கியர் விபத்தில் உயிரிழந்தார்!
சுவிச்சர்லாந்தை சார்ந்த 19 வயதான மோட்டோஜிபி ரைடர் ஜேசன் டுபாஸ்கியர் (Jason Dupasquier) உயிரிழந்தார்.
இத்தாலிய கிராண்ட் பிரிக்ஸ் (Italy GP) தகுதி பிரிவில், நேற்று சனிக்கிழமை ஏற்பட்ட விபத்தில் சுவிஸ் மோட்டோ 3 வீரர் ஜேசன் டுபாஸ்கியர் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார்.
அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.
We’re deeply saddened to report the loss of Jason Dupasquier
— MotoGP™? (@MotoGP) May 30, 2021
On behalf of the entire MotoGP family, we send our love to his team, his family and loved ones
You will be sorely missed, Jason. Ride in peace pic.twitter.com/nZCzlmJsVi
இந்த விஷயம் தொடர்பாக மோட்டோஜிபி வெளியிட்டுள்ள அறிக்கையில், போட்டிகளத்தில் மருத்துவ ஊழியர்கள் அனைவரின் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும், துபாஸ்கியர் பலத்த காயங்களுக்கு ஆளானதாக மருத்துவமனை அறிவித்துள்ளது. இன்று அவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், " மோட்டோஜிபி குடும்பத்தின் சார்பாக, நாங்கள் எங்கள் அணியின் சார்பாக, அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். நிம்மதியாக நீங்கள் சவாரி செய்யுங்கள் (Ride in peace) " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.