கனடாவில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய நபருக்கு நேர்ந்த கதி!
கனடாவில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கனடாவில் ஸ்காப்ரோ பகுதியில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஸ்கார்ப்ரோவின் மார்க்கம் மற்றும் ஈஸ்ட் பாக் வீதிகளுக்கு அருகாமையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
மோட்டார் சைக்கிள் ஒன்று வாகனம் ஒன்றில் மோதுண்டத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிளோட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் குறித்த சைக்கிள் ஒட்டி பலத்த காயங்கள் உள்ளாகி இருந்த காரணத்தினால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்திற்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை, சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்