மக்கள் பணத்தில் நத்தார் சுற்றுலா சென்ற கனடிய அரசியல்வாதிக்கு ஏற்பட்ட நெருக்கடி
கனடாவில் என்.டி.பி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மக்களின் வரிப்பணத்தில் சுற்றுலா சென்றமை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
புதிய ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிக்கி அஸ்தன், சுற்றுலா ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
குடும்பத்தினருடன் அவர் இவ்வாறு சுற்றுலா பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
இதற்காக மொத்தமாக 17000 டாலர்கள் செலவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கியூபெக் மற்றும் மொன்றியல் ஆகிய பகுதிகளுக்கு நத்தர் பண்டிகை காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்தன் சுற்றுலாப் பயணங்களை மேற்கொண்டிருந்தார்.
அஸ்தன் அவரது கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் இவ்வாறு சுற்றுலா பயணம் செய்திருந்தார் என தெரிவிக்கப்படுகிறது.
ஒட்டாவாவில் அமைந்துள்ள தமது குடியிருப்பில் மூட்டை பூச்சி மருந்து தெளிக்கப்பட்டதன் காரணமாக அவசரமாக தாங்கள் வெளியிடத்திற்கு செல்ல நேரிட்டதாகவும் இதனால் இவ்வாறு செலவு ஏற்பட்டது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்தன் தெரிவித்துள்ளார்.
குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் செலவிட்ட தொகையில் 2900 டாலர்களை அவர் மீள செலுத்தியுள்ளார்.
இந்த தொகை எதற்காக செலவிடப்பட்டது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.