குறிப்பிட்ட நூடுல்ஸ் உணவுகளை திரும்பப்பெறும் கனேடிய மாகாணங்கள்: எச்சரிக்கை செய்தி
கனடாவின் பல மாகாணங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள சுக்கினி நூடுல்ஸ் உணவுகளை திரும்பப்பெற கோரப்பட்டுள்ளது.
குறித்த நூடுல்ஸ் உணவுகளால் listeria பாதிப்பு ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. இதனிடையே, Freshline Foods நிறுவனம் தங்களின் தயாரிப்பான சுக்கினி நூடுல்ஸ் உணவு வகைகளை திரும்பப்பெறுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
இந்த தகவலை கனடாவின் உணவு தரம் கண்காணிப்பு அமைப்பான CFIA தெரிவித்துள்ளது. திரும்பப்பெறப்படும் உணவுகள் எந்த கடைகளில் இருந்து என்பது போன்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை.
CFIA முன்னெடுத்த சோதனைக்கு பிறகே, சுக்கினி நூடுல்ஸ் உணவுகள் திரும்பப்பெறப்பட்டுள்ளன. மட்டுமின்றி CFIA முன்னெடுத்துள்ள இந்த நடவடிக்கையால் மேலதிக தயாரிப்புகளும் சிக்கலாம் என்றே தெரிய வந்துள்ளது.
மேலும், குறிப்பிட்ட உணவுகளை உரிய நிறுவனங்கள் விற்பனையில் இருந்து திரும்பப்பெறுகின்றனர்களா என்பது தொடர்பில் CFIA கண்காணித்து வருகிறது. முதற்கட்ட விசாரணையில் அதிகமாக நோவா ஸ்கோடியா, ஒன்ராறியோ, கியூபெக் ஆகிய மாகாணங்களில் சுக்கினி நூடுல்ஸ் திரும்பப்பெறப்பட்டு வருகிறது.
இது நாடு முழுவதும் திரும்பப்பெறப்படும் என்றே கூறப்படுகிறது.
பொதுமக்கள் குறித்த தயாரிப்புகளை வாங்கியிருந்தால் அந்தந்த கடைகளில் திருப்பித்தரலாம் என்றே தெரிய வந்துள்ளது.
இந்த உணவுகளால், இதுவரை கனேடிய மக்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை.