பல முறை எச்சரித்தும்... விமான இயந்திரத்தில் சிக்கி பரிதாபமாக பலியான தாயார்
அமெரிக்காவில் விமான நிலைய ஊழியர் ஒருவர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்தின் இயந்திரத்தில் சிக்கி பரிதாபமாக பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விமான இயந்திரம் செயலில் இருப்பதாகவும், நெருக்கமாக செல்ல வேண்டாம் என பலமுறை எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் Piedmont விமான சேவை நிறுவனத்தின் ஊழியராக செயல்பட்டு வந்துள்ளார் 34 வயதான கர்ட்னி எட்வர்ட்ஸ்.
3 பிள்ளைகளின் தாயாரான இவர் சம்பவத்தின் போது மாண்ட்கோமெரி பிராந்திய விமான நிலையத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், டல்லாஸ் பகுதியில் இருந்து அப்போது தரையிறங்கிய விமானத்தின் அருகே இவர் பணியாற்றும் சூழல் ஏற்பட்டுள்ளது.
விமானம் தரையிறங்கியதும் விமானிகள், இரண்டு நிமிடங்கள் இயந்திரத்தை செயல்பாட்டில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதன் பின்னர் தான் முழுமையாக இயந்திரத்தின் செயல்பாடு துண்டிக்கப்படும்.
அந்த விமானிகளும் ஓடுதள ஊழியர்களிடம் இது தொடர்பில் எச்சரித்தும் உள்ளனர். இந்த நிலையில் தான், பலமுறை எச்சரித்தும் பணியாற்றும் வேகத்தில் அந்த எச்சரிக்கைகளை கண்டுகொள்ளாத கர்ட்னி எட்வர்ட்ஸ் திடீரென்று விமான இயந்திரத்திற்குள் சிக்கிக்கொண்டுள்ளார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் சம்பவம் நடந்து முடிந்ததாகவே கூறப்படுக்கிறது. மேலும், கண்கானிப்பு கமெராவில் குறித்த கோர காட்சிகள் பதிவாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.