வெளிநாடு ஒன்றில் நாடு திரும்ப காத்திருந்த இலங்கையர் கொடூர கொலை
கட்டாரில் அல் வாப் பகுதியில் உள்ள குடியிருப்புக் கட்டடத் தொகுதி ஒன்றில் நேற்று முன்தினம் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இலங்கையர் ஒருவர் கொல்லப்பட்டதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் குறித்து தெரியவருகையில், கட்டார் இளைஞர் ஒருவர், பெண் ஒருவருடன் வாகனத்தில் குறித்த குடியிருப்புத் தொகுதிக்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளார். இதன்போது, அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த காவலாளி, அவரின் அடையாள அட்டையைக் காண்பிக்குமாறு கோரியுள்ளார்.
எனினும், அடையாள அட்டையைக் காண்பிக்க மறுத்தமையால், காவலாளி அவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. இதன்போது காவலாளி மீது துப்பாக்கிச் சூடு நடத்திய குறித்த நபர், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
துப்பாக்கிப் பிரயோகத்துக்கு இலக்கான இலங்கையைச் சேர்ந்த காவலாளி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த மற்றுமொரு காவலாளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, தப்பிச் சென்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்தியவர் பயன்படுத்திய துப்பாக்கி உரிமம் இல்லாதது என்றும், அந்த துப்பாக்கியை அவர் எவ்வாறு பெற்றார் என்பது குறித்தும் தற்போது விசாரணை நடைபெற்று வருகின்றது.
அதேவேளை “இறந்த பாதுகாவலர் மூன்று பிள்ளைகளின் தந்தை மற்றும் அவரது ஒப்பந்தம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் முடிவடைவதால் தனது சொந்த நாட்டிற்குத் திரும்ப காத்திருந்ததாக அந்த வளாகத்தின் குடியிருப்பாளர்களில் ஒருவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆதரவாக உள்ளூர் சமூகம் தற்போது பணம் திரட்டி வருகிறதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி சுந்தரேஸ்வரி இரத்தினகோபால்
கொக்குவில், கொழும்பு, Duisburg, Germany, Leverkusen, Germany
13 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அருணாசலம் முத்துலிங்கம்
காரைநகர் மாப்பாணவூரி, இராசாவின் தோட்டம், Aubervilliers, France
20 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சின்னத்தம்பி அழகு
வல்வெட்டித்துறை இலந்தைக்காடு, Montreal, Canada, Cornwall, Canada, நல்லூர்
31 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்லம்மா இராசையா
புங்குடுதீவு 10ம் வட்டாரம், பிரான்ஸ், France, டோட்மண்ட், Germany
20 May, 2019
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022