புதிய கட்சியைத் தொடங்கும் மஸ்க் ; எச்சரிக்கை விடுத்துள்ள ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கொண்டு வந்துள்ள, வரி மற்றும் செலவு யோசனைக்கு, ஈலோன் மஸ்க் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இதற்கிடையே, ட்ரம்பின் இந்த யோசனை அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்டதையடுத்து, புதிய கட்சியைத் தொடங்குவேன் என்று ஈலோன் மஸ்க் தெரிவித்தார்.
இந்நிலையில், ஈலோன் மஸ்க் மீண்டும் தென் ஆப்பிரிக்காவிற்கே செல்ல வேண்டியிருக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து தனது சமூக ஊடக பதிவில், "ஜனாதிபதி தேர்தலில் ஈலோன் மஸ்க், என்னைத் தீவிரமாக ஆதரித்தார். ஆனால், EV வாகனங்களுக்கான நுகர்வோர் வரிச் சலுகையை ரத்து செய்ய வேண்டும் என்பதை நீண்ட நாட்களாக நான் கூறி வருகிறேன்.
இது ஈலோன் மஸ்க்கிற்கும் தெரியும். வரலாற்றில் எந்த மனிதரையும் விட அதிக சலுகைகளை அனுபவிப்பது ஈலோன் மஸ்க் தான்.
சலுகைகள் மட்டும் இல்லையென்றால் கடையை காலி செய்துவிட்டு தென்னாபிரிக்காவுக்கே அவர் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும்" என ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.