உக்ரைனில் எனது குடும்பத்தவர்கள் இறந்துகொண்டிருக்கின்றனர்; ஸ்கொட்லாந்து ஆசிரியை பரிதவிப்பு
உக்ரைனின் மரியுபோலில் உள்ள தனது குடும்பத்தவர்கள் மெதுமெதுவாக அமைதியாக உயிரிழந்துகொண்டிருப்பதாக தாம் அஞ்சுவதாக ஸ்கொட்லாண்டில் உள்ள ஆசிரியை ஒருவர் கவலை வெளியிட்டுள்ளார்.
ரஷ்யா - உகரைன் போரால தனது தாய் சகோதரருடனான தொடர்புகளை இரண்டு வாரங்களிற்கு முன்னர் இழந்துவிட்டதாக Penicuik, Midlothian வசிக்கும் Elena Coventry, 48தெரிவித்துள்ளார்.
அதுடன் அவர்கள் உயிருடன் உள்ளனரா இல்லையா என்பதை அறியமுடியாமலிருப்பது தாங்கிக்கொள்ள முடியாத விடயம் எனவும் அவர்வேதனை வெளியிட்டுள்ளார்.
ரஷிய படையினர் முற்றுகையிட்டுள்ள மரியுபோல் நகரில் சிக்குண்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களில் அவர்களும் உள்ளனர். நகரில் உணவு நீருக்கு பெரும்தட்டுப்பாடு நிலவுகின்றது எரிவாயு மின்சாரவிநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது என பிரிட்டனின்செஞ்சிலுவை குழு தெரிவித்துள்ளது.
நீரை அருந்துவதற்காக மக்கள் பனியை பயன்படுத்துகின்றனர் வீடுகளிற்கு வெளியே விறகுகளை பயன்படுத்தி உணவு தயாரிக்கின்றதாக் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனது 82 வயது தாயும் 46 வயது சகோதரரும் மரியுபோலின் Vostochny districtநகரத்தில் உள்ளனர் கொவென்டிரி தெரிவித்துள்ளார். எனது தாயும் சகோதரனும் இடதுகரைபகுதியில் 80,000 மக்களுடன் சிக்குண்டுள்ளனர்,அவர்கள் நிலவறைகளிற்குள் மறைந்து வாழ்வதால் அங்குள்ள மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் குறித்து அவர்கள் அறிந்திருக்கவில்லை எனவும் அவர் கூறுகின்றார்.
அங்கு எல்லாமே மிகப்பெரிய உயரமான கட்டிடங்கள் அவற்றின் கீழ் நிலவறைகள் காணப்படும்,அங்கேயே பயன்படுத்தப்படும் குழாய்கள் உள்ளன அவை பதுங்குழிகள் இல்லை,அங்கேயே அனைவரும் உள்ளதாகவும் அவர்குறிப்பிட்டுள்ளார்.
எப்போதும் உணவுப்பொருட்களை வைத்திருங்கள் என அவர்களிற்கு தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் தற்போது உணவுப்பொருட்கள் முடிவடைந்திருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் குளிர்மிகுந்த இருள்மிகுந்த நிலவறைகளிற்குள் நீண்டநாட்களாக வாழ்வதால் அவர்களிடம் உணவிருக்குமா, அல்லது தாயை விட்டு போரிடவேண்டிய நிலைக்கு சகோதரர் தள்ளப்பட்டிருப்பாரா என்பதுகூட தெரியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அங்குமனிதாபிமான பேரிடர் நிலவுகின்றது யாரும் அவர்களிற்கு உதவுவதற்கு செல்ல முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுமார் 400000 மக்களை கொண்ட மரியுபோல் ரஸ்யாவின் முக்கிய மூலோபாய இலக்காக காணப்படுகின்றது,அந்த நகரம் கைப்பற்றப்பட்டால் ரஸ்யா சார்பு கிளர்ச்சியாளர்கள் கிரிமியாவில் உள்ள படையினருடன் இணையமுடியும் எனவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.