தோல்வியை ஒத்துகொள்ளாது அடம்பிடிக்கும் டிரம்ப்!
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் வாக்குச்சீட்டில் தனது பெயர் இடம்பெற்றிருந்தால் குடியரசுக் கட்சி வெற்றி பெற்றிருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டதைச் சுட்டிக்காட்டிய அவர், வாக்குச்சீட்டில் தனது பெயர் இருந்திருந்தால் வெற்றி உறுதியாகியிருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஈரான் அணுவாயுதங்களைப் பெற்றுக்கொள்வதற்கு அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்த ட்ரம்ப், அவ்வாறு இடம்பெற்றால் தற்போதுள்ள நிலைமைகள் அனைத்தும் எதிர்காலத்தில் இல்லாமல் போகக்கூடும் எனவும் எச்சரித்துள்ளார்.
அதேவேளை, ஜனநாயகக் கட்சியினருடன் இணக்கமாகச் செயற்படத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அவர்கள் அழிவை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டால் அதனை அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகக் கட்சியினர் சில விடயங்கள் தொடர்பில் கலந்துரையாட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அவர்களின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருந்தால் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்த முடியும் எனவும் ட்ரம்ப் மேலும் குறிப்பிட்டுள்ளார்.