மியான்மர் டைமன்ட் நகரம் மீது மீண்டும் இராணுவ தாக்குதல்
மியான்மரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பிப்ரவரி முதல் நாளில் இராணுவம் கவிழ்த்தது. ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள இராணுவம் முந்தைய ஆட்சியாளர்கள் அனைவரையும் வீட்டு சிறையில் வைத்துள்ளது.
இதனிடையே ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டு மக்கள் பிப்ரவரி மாதம் 2-வது வாரத்தில் இருந்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டங்களை ஒடுக்க இராணுவம் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட கொடூரமான அடக்கு முறைகளைக் கையாண்டு வருகிறது.
இந்தநிலையில், மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் அந்த நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள மைண்டட் நகரம் மீது இராணுவம் தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதுகுறித்து மியான்மரில் உள்ள அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தூதரகங்கள் மிகுந்த கவலை தெரிவித்துள்ளன.