பிரான்ஸில் தமிழர் பகுதியில் பெண் ஒருவரை சீண்டிய மர்ம நபர்கள்!
பிரான்ஸில் தமிழர்கள் அதிகம் வாழும் பாரிஸ், Yvelines பகுதியில் மர்ம நபர்களால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
வீட்டிற்கு வந்த போலி ஊழியர் ஒருவரால் பெண் ஒருவர் ஆபத்தான நிலைமைக்கு முகம் கொடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அண்மையில் இந்த நகரில் இடம்பெற்ற சம்பவத்தை அடுத்து தனிமையில் இருக்கும் பெண்கள் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அங்கு உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து, பெண் ஒருவர் மீது பாலியல் வல்லுறவு மேற்கொண்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தளபாடங்கள் விற்பனை செய்யும் பிரபல Ikea நிறுவனத்தின் ஊழியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுளளார்.
கடந்த டிசம்பர் 10 ஆம் திகதி அன்று பெண் ஒருவரின் வீட்டுக்கு குறித்த நபர் தளபாடம் ஒன்றை விநியோகிக்கச் சென்றுள்ளார். அப்போது குறித்த பெண் வீட்டில் தனியாக வசிப்பதை அறிந்துகொண்ட அவர், பின்னர் அவரை அடிக்கடி தொலைபேசியில் அழைப்பது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளார்.
சில வாரங்களின் பின்னர், கடந்த செவ்வாய்க்கிழமை குறித்த நபர் அப்பெண்ணின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு குறித்த பெண் தனியாக இருப்பதை சாதகமாக பயன்படுத்தி, அவரினை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.
அவரது வாயினை கைகளால் பிடித்து குரல் எழுப்ப முடியாமல் தடுத்துள்ளார் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. பின்னர் அவர் மீது பாலியல் வல்லுறவுக்கு முயற்சியினை மேற்கொண்டுள்ளார்.
அதற்கிடையில் குறித்த பெண் தனது மடிக்கணினியூடாக அவசர இலக்கத்தில் தொடர்புகொண்டுள்ளார். அதன்படி விரைந்து வந்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்தனர்.
இந்த நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
அதற்கமைய, இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பெண்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.