யாழ் நடேஸ்வராக் கல்லூரியை முன்னேற்ற ஒன்றுசேரும் பழையமாணவர் சங்கத்தின் பிரித்தானிய கிளை

By Independent Writer Oct 27, 2023 08:41 PM GMT
Report

 யாழ் நடேஸ்வராக் கல்லூரியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கு நடேஸ்வரன்கள் அனைவரும் இணைந்து செயற்படுவது மிக முக்கியமானது என்றும், போரினாலும், போதிய வசதிகள் இன்றியும் நலிவுற்று இருக்கும் பிரதேசத்தில் இருக்கும் மக்களின் பிள்ளைகளின் கல்வித்தரத்தையும், வாழ்க்கைத்தரத்தையும் உயர்த்துவது பழைய மாணவர்களின் கடமை என்று கூறுகின்றது, நடேஸ்வரக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஐக்கிய இராச்சியக் கிளை.

இது தொடர்பாக நடேஸ்வரக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஐக்கிய இராச்சியக் கிளை செயலாளர் தேவராசா காண்டீபன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,  

1901 இல் காங்கேசன்துறையி்ல் ‘English Elementary School’ மற்றும் ‘Hindu Tamil School’ என இரண்டு பாடசாலைகள் உருவாக்கப்பட்டிருந்தன.

அவை இரண்டும் 1945 இல் இணைக்கப்பட்டு ‘நடேஸ்வரக் கல்லூரி’ தோற்றம் பெற்றது.

வளம் நிறைந்த யாழின் வலிகாமத்தில், கல்வியிலும் விளையாட்டிலும் முத்திரை பதித்த ஒரு பாடசாலையாகப் பின்னாளில் மிளிரத் தொடங்கி இருந்தது. வளர்ச்சியில் ஏறுமுகம் கண்டு வந்த பாடசாலை 1987, 1990 போர்களில் ஏற்பட்ட இடப்பெயர்வுகளால் மிகவுமே பாதிக்கப்படத் தொடங்கியது.

1990 இல் இடம்பெயர்ந்து சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் இயங்கியது. வலிகாம மக்கள் இடப்பெயர்வுக்கும் புலப்பெயர்வுக்கும் உட்பட்டமையால், அண்ணளவாக 1600 வரை கல்வி கற்ற பிள்ளைகளின் எண்ணிக்கை 200 க்குள் அடங்கிப் போனது! அதன் பின்னரும் பல இடங்களில் தற்காலிகமாக இயங்கிய பாடசாலை 2016 வரை தெல்லிப்பழை பலநோக்குக் கூட்டுறவு வைத்தியசாலையில் இயங்கியது. 2016 இல் காங்கேசன்துறைக்கு எமது பாடசாலை மீள் குடி கொண்டது.

இடம்பெயர்ந்த பின்னர் பல தடவைகள் மூடப்படும் தறுவாயில் இருந்த பாடசாலையை வளர்ச்சிப் பாதையில், கொண்டு சென்றமைக்கு, புலம் பெயர் தேசங்களில் முதன் முதலாக, 1997 இல் ஐக்கிய இராச்சியத்தில் உருவாக்கப்பட்ட நடேஸ்வரக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் மிகப் பெரிய பங்கினை வகித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, அண்மையில் திறந்து வைக்கப்பட்ட விஞ்ஞான ஆய்வுகூடம் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்குப் பெரிய பாலமாக அமைந்து வருகின்றது. இன்னும் பல திட்டங்கள் மூலம் பாடசாலையை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கு நடேஸ்வரன்கள் அனைவரும் இணைந்து செயற்படுவது மிக முக்கியமானது ஆகும்! போரினாலும், போதிய வசதிகள் இன்றியும் நலிவுற்று இருக்கும் பிரதேசத்தில் இருக்கும் மக்களின் பிள்ளைகளின் கல்வித்தரத்தையும், வாழ்க்கைத்தரத்தையும் உயர்த்துவது பழைய மாணவர்களாகிய எமது கடமையாகும்!

பாடசாலையின் வளர்ச்சிக்காக, நிதி சேகரிக்கும் வகையில் ஐக்கிய இராச்சியத்தில் பழைய மாணவர் சங்கத்தினால் 28/10/2023 அன்று ‘நடேஸ்வரன் இரவு’ நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது! அனைவரையும் அந்நிகழ்வுக்கு வந்து எமது பாடசாலையின் வளர்ச்சிக்குக் கைகொடுத்து உதவுமாறு கேட்டு நிற்கின்றோம்!


Gallery
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US