கனடாவில் உணவுப் பொருட்களின் விலைகள் மேலும் உயரும்
கனடாவில் உணவுப் பொருட்களின் விலைகள் மேலும் உயர்வடையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
உணவுப் பொருள் விநியோகஸ்தர்கள் இது குறித்து மளிகைக்கடை வியாபாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.
மளிகைப் பொருட்களின் விலைகள் மேலும் உயர்வடையும் என தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே இந்த ஆண்டில் உணவுப் பொருட்களின் விலைகள் இரட்டை இலக்கங்களினால் உயர்வடைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பால்பொருள் உற்பத்திகள், சீஸ் வகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.
கப்பல் கட்டணங்கள், பொதியிடல் செலவுகள் உள்ளிட்ட பல காரணிகளினால் இவ்வாறு விலைகள் உயர்வடைந்து செல்லும் நிலைமையை அவதானிக்க முடிகின்றது.
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு மக்களை பாதிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        